முன்னணியான அரசுசார் ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதத்திற்கான தனது நிதி நிலவரத்தை அறிவித்துள்ளது.
மேம்பட்ட சந்தை நிலவரம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வலுவான வளர்ச்சியும் நிலைத்த லாபத்தன்மையும் பிரதிபலிக்கும் வகையில் அதன் நிதி நிலவர அறிக்கை அமைந்துள்ளது.
2025 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் SLICGL நிறுவனம் 18% வருடாந்த வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட மொத்த பிரீமியமாக ரூ. 21,853 மில்லியனை பதிவுசெய்துள்ளது. இந்நிறுவனம் செயற்பாட்டு இலாபமாக ரூ.257 மில்லியனையும், வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ.2,614 மில்லியன் ரூபாவையும் அதாவது 17% வருடாந்த வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை, அதிகரிக்கப்பட்ட வாகன இறக்குமதி மற்றும் சந்தையில் பெற்றுள்ள இடம் போன்றவற்றின் ஒத்துழைப்புடன் இதனை அடையமுடிந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான காப்புறுதிதாரர் என்ற ரீதியில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்நிறுவனம் ரூ. 0.7 பில்லியனை வரியாகச் செலுத்தியிருப்பதுடன், அரசாங்க பங்குகளில் ரூ.11.5 பில்லியனை முதலீடு செய்திருப்பதன் ஊடாக நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வழங்கியுள்ள கணிசமான பங்களிப்பு புலப்படுகிறது.
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் ரூ.1.5 பில்லியன் மதிப்பிலான இலாபப் பங்குத் தொகையைத் திறைசேரிக்கு வழங்கி அதனை வலுப்படுத்தியிருப்பதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% அதிகரிப்பாகும். இதன் மூலம், தேசிய வருமான அதிகரிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்களிப்பது என்ற தனது வகிபாகத்தை இந்நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM