அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்குமிடையிலான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் பிராந்தியமான குவாம் அருகே ரொக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாரகும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய தலைவர் இத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் தயாரகவிருக்கும் வாங்சாங் -12 ரொக்கெட்டுகளை ஏவும் பட்சத்தில் ரொக்கெட்டுக்கள் ஜப்பானை கடந்து சென்று குவாமிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் தரையிரங்கும் என அந் நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது.

வட கொரியா எச்சரிக்கை விடுவதை போல் ரொக்கெட் தாக்குதல் நடாத்தினால் வடகொரியா ஆட்சி தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் வெறும் பேச்சளவிலே என விமர்சகர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.