தன வரவை மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு..!

10 Nov, 2025 | 06:48 PM
image

எம்முடைய மகிழ்ச்சிக்கும், குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கும் மூல ஆதாரமாக இருப்பது பொருளாதாரம் தான். அதற்கு ஆசியை வழங்குவது மகாலட்சுமி தான். ஒவ்வொருவரும் மகாலட்சுமியை பிரத்யேகமாக வணங்குவதன் மூலம் தங்களுடைய தன பிராப்தியை மேம்படுத்திக் கொள்ளலாம் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் இதற்கான சில வழிமுறையையும், நியமங்களையும் அவர்கள் விவரித்திருக்கிறார்கள்.

முதலில் உங்களுடைய வீட்டின் பூஜையறையில் ஒரு வாயகன்ற வெள்ளி கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அதில் ஒரு சோழி-  ஒரு முத்து - ஒரு கோமதி சக்கரம் - கைப்பிடி அளவு ஐந்து ரூபாய் நாணயங்கள் - ஆகியவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஒரு வெண்மை நிற தாமரை பூ மீது வைத்திட வேண்டும். இதனை குண்டு மல்லிகை பூ அல்லது மாதுளை பழ மொட்டு கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

உடனே எம்மில் பலரும் அர்ச்சனை செய்ய தயார். ஆனால் எப்போது? என கேட்பார்கள். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை அல்லது சுக்கிர பகவானின் நட்சத்திரங்களான பரணி- பூரம்- பூராடம்-  ஆகிய நட்சத்திர நாட்கள் ,பௌர்ணமி நாள் அல்லது உத்திரட்டாதி- அனுஷம்- ஆகிய சனி பகவானின் நட்சத்திர தினத்தன்றும், பூரட்டாதி எனும் குரு பகவானின் நட்சத்திர தினத்தன்றும் சுக்கிர ஓரையில் இந்த அர்ச்சனையை நீங்கள் மேற்கொள்ளலாம்.

இந்தத் தருணத்தில் மகாலட்சுமி அஷ்டக மந்திரத்தை உச்சரித்து நீங்கள் பூஜையை மேற்கொண்டால்... மகாலட்சுமியின் பரிபூரணமான ஆசியை பெறலாம்.

அத்துடன் உங்களுடைய உணவு பட்டியலில் இட்லி -இடியாப்பம் -ஆப்பம்- ஆகியவற்றை தெரிவு செய்து கொண்டு, அதனை குங்குமப்பூ கலந்த தேங்காய் பாலால் நனைத்து, அதன் மீது பாதாம் பருப்பு -பிஸ்தா பருப்பு- முந்திரி பருப்பு- உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை தூவி, சிறிதளவு தேனையும் சேர்த்துக் கொண்டு பசியாற வேண்டும். இந்த உணவு உங்களுக்கு நாளாந்தம் தேவையான ஆற்றலை வழங்குவதுடன் சிந்தனையில் தெளிவையும் சம யோஜித அறிவையும் அளித்து, தன பிராப்திக்காண சூட்சம பாதையை உணர்த்தும். அதே தருணத்தில் இரவு நேரத்தில் சுகமான உறக்கத்தையும் வழங்கி, உங்களை மகிழ்விக்கும். இவை அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து செய்தால் மகாலட்சுமியின் குறிப்பாக தன லட்சுமியின் கடைக்கண் பார்வை பெற்று பொருளாதார நிலையில் மேம்பாட்டு அடைவீர்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17