ஒரு மில்லியன் 'லைக்ஸ்'களை பெற்று கவனத்தைக் கவர்ந்த விஜயின் 'ஜன நாயகன்' பட பாடல்

10 Nov, 2025 | 06:46 PM
image

உலக தமிழர்கள் - தமிழ் சினிமா-  தமிழக அரசியல்- என பல தலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜன நாயகன் 'எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'எங்க அண்ணன் கச்சேரி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்ட குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட 'லைக்கு'களையும், பன்னிரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டும் சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன் 'எனும் திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ,கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'எங்கண்ணன் கச்சேரி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பின்னணி பாடகர்களான அனிருத் - விஜய் - அறிவு - ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். டி சீரிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடல் இணையத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டும், 'லைக்கு'கள் பெற்றும் சாதனை படைத்து வருகிறது. அனிருத்தின் வழக்கமான உற்சாகத்துடன் கூடிய துள்ளல் இசை பாணியில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடலும்... பாடலுக்காக அனிருத்- அறிவு -விஜயின் குரலும்... பாடலுக்கான உள்ளடக்க பொருளும்... ரசிகர்களை கொண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50
news-image

ஓகஸ்டில் வெளியாகும் மாதவனின் 'ஜி டி...

2026-07-18 14:33:40
news-image

லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக வெற்றி...

2026-07-18 14:30:00
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸ்...

2026-07-18 14:26:40
news-image

நடிகர் லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2026-07-18 14:23:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17