கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர்ரீட்டா' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

10 Nov, 2025 | 06:42 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' ரிவால்வர்ரீட்டா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜே கே சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரிவால்வர்ரீட்டா 'எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி,  சென்றாயன், சுப்பர் சுப்பராயன், அஜய் கோஷ்,  ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் பி. கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான்ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிரைம் வித் கொமடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் - தி ரூட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் கடந்த ஆண்டில் 'சைரன்' மற்றும் 'ரகு தாத்தா' ஆகிய இரண்டு படங்கள் வெளியானது என்பதும் இவை இரண்டும் வணிக ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பாரிய வெற்றியை பெறவில்லை என்பதும் இந்த ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாகும் முதல் தமிழ் படம் இது என்பதும் அத்துடன் அவரின் திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29