நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

10 Nov, 2025 | 06:36 PM
image

தமிழ் திரையுலகில் திறமை வாய்ந்த நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் திரு வீர் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சி. ஹெச். குசேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பரத் மஞ்சு ராஜு இசையமைக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 19 ஆம் திகதியன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது என்றும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு முதன்மையான தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தீயவர் குலை நடுங்க' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகிறது என்பதும் இந்த ஆண்டில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் முதல் தமிழ் - தெலுங்கு திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ரியோ ராஜ்...

2026-08-12 15:43:53
news-image

நடிகர் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தின் இரண்டாவது...

2026-08-12 14:55:44
news-image

சுயாதீன இசை கலைஞர்கள் பால் டப்பா...

2026-08-12 14:53:43
news-image

ஐம்பது கோடி ரூபாய் வசூலை கடந்த...

2026-08-12 14:39:30
news-image

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும்...

2026-08-11 20:58:57
news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21