மத்திய ஆசிய 19 வயதின் கீழ் பெண்கள் கரப்பந்தாட்டம் : இலங்கைக்கு வெண்கலம், கிர்கிஸ்தானுக்கு தங்கம், நேபாளத்துக்கு வெள்ளி

10 Nov, 2025 | 06:31 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க CAVA)19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இலங்கை வென்றெடுத்தது.

லீக் சுற்றில் மாலைதீவுகள், கிர்கிஸ்தான் ஆகிய அணிகளை தலா 3 நேர் செட்களில் இலங்கை வெற்றிகொண்டபோதிலும் நேபாளத்திடம் (0 - 3 என்ற செட்கள்) தோல்வி அடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் மாலைதீவுகளை 3 நேர் செட்களில் (25 - 6, 25 - 11, 25 - 10) வெற்றிகொண்டு வெண்கலப் பதக்கதைத் தனதாக்கிக்கொண்டது.

சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட கிர்கிஸ்தான் 3 - 2 என்ற செட்கள் வித்தியாசத்தில் (22 - 25, 25 - 20, 25 - 21, 13 - 25, 15 - 11) வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான மத்திய ஆசிய   கரப்பந்தாட்ட சங்க (Central Asia Volleyball Association - CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை (09) முடிவடைந்தது.

மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் இப் போட்டியை நடத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-06 20:36:50
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57
news-image

AFC 20இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-09-04 12:12:27
news-image

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச்...

2026-09-03 14:15:10
news-image

ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான...

2026-09-02 22:49:03
news-image

பிரதான கழகங்கள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்:...

2026-09-02 18:28:56
news-image

வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது...

2026-09-01 18:55:51
news-image

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் -...

2026-09-01 13:30:20
news-image

இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' என்ற...

2026-09-01 00:15:17