சந்தீப் கிஷன் நடிக்கும் 'சிக்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

10 Nov, 2025 | 06:30 PM
image

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'சிக்மா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் 'சிக்மா' எனும் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜிபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் .தமன் இசையமைத்திருக்கிறார். சாகசத்துடன் கூடிய எக்சன்  என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அச்சமற்ற - சுதந்திரமான இளைஞன் - இந்த சமூகத்தால் புரிந்து கொள்ளப்படாத இளைஞன்-  தன் இலக்குகளை நோக்கி எப்படி நகர்கிறார்? என்பதையும், அவர் எம்மா மாதிரியான சவால்களை மேற்கொள்கிறார் என்பதையும் இப்படம் பேசுகிறது. வேட்டை- கொள்ளை- நகைச்சுவை -என வித்தியாசமான அனுபவங்களை வழங்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்றும் , அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், இது தொடர்பான புதிய தகவல்கள் தொடர்ச்சியாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'வேட்டைக்காரன்' என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி நடிகராக அறிமுகமான விஜயின் வாரிசான ஜேசன் சஞ்சய் -கதையின் நாயகனாக அறிமுகமாவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்.. அவர் 'சிக்மா' படத்தின் மூலமாக இயக்குநராக  கலைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவருடைய எண்ணத்தில் உருவான 'சிக்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - நட்சத்திர இயக்குநராக மிளிர்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னிந்திய திரைத்துறையில் இந்திய மதிப்பில் நான்காயிரம்...

2025-12-10 15:44:22
news-image

அர்ஜுன் தாஸ் உடன் இணையும் மலையாள...

2025-12-10 15:26:44
news-image

மீண்டும் இணையும் ஆதித்யா பாஸ்கர் -...

2025-12-10 15:10:55
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ஜஸ்டிஸ்...

2025-12-10 15:05:40
news-image

நடிகர் ரக்சன் நடிக்கும் 'மொய் விருந்து'...

2025-12-10 14:59:06
news-image

'மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திரைப்படம்...

2025-12-10 09:25:58
news-image

நடிகர் குரு லக்ஷ்மன் நடிக்கும் 'ஹார்டிலே...

2025-12-10 09:22:29
news-image

இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் 'எனக்குள்ளே மாற்றமும்...

2025-12-08 18:13:26
news-image

சூர்யா நடிக்கும் 'சூர்யா 47 '...

2025-12-08 18:07:35
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' ரிட்டர்ன்ஸ்

2025-12-08 17:09:26
news-image

நடிகை மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து...

2025-12-08 17:06:31
news-image

அறிமுக நடிகர் லெனின் நடிக்கும் 'ரெட்...

2025-12-08 17:02:53