பிராடிகினீசியா எனும் மெதுவான இயக்கம் - பார்கின்சன் நோயின் முதன்மையான அறிகுறியா..?

10 Nov, 2025 | 06:24 PM
image

எம்முடைய வீடுகளில் உள்ள மூத்த குடும்ப உறுப்பினர்களுக்கு திடீரென்று அவர்களுடைய நாளாந்த செயல்பாட்டில் ஒரு மந்த தன்மை ஏற்படக்கூடும்.  சிலர் தங்களுடைய நாளாந்த கடமையை கூட இயல்பான வேகத்தை விட மெதுவாகவே மேற்கொள்வார்கள். இதனை துல்லியமாக அவதானித்தால் இது பார்கின்சன் நோயின் அறிகுறி என உணரலாம். இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் கூறும் அறிவுரையையும், எச்சரிக்கையும் காண்போம்.

பார்கின்சன் நோய் என்பது எம்முடைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் இயக்கம் தொடர்பான குறைபாடாகும். இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை பெற்றால்.. இதனை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலும். இதற்கு இத்தகைய நோய் பாதிப்பின் அறிகுறிகளை பற்றி நாம் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

நடுக்கம் அதாவது கை அல்லது விரல்களில் இயல்பான அளவை விட கூடுதலான நடுக்கம் விரும்பத்தகாத தருணங்களில் ஏற்படும். சிலருக்கு கால் அல்லது தாடை பகுதியில் திடீரென்று நடுக்கம் தொடங்கும். மேலும் வேறு சிலருக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இந்த இரண்டு விரலில் மட்டும் நடுக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக நீங்கள் ஏதேனும் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போதோ அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போதோ இத்தகைய செயல்பாடு ஏற்படும். இதன் காரணமாக உங்களுடைய நாளாந்த  செயல்பாட்டின் வேகம் குறையக்கூடும். சிலருக்கு இத்தகைய தருணங்களில் நடுக்கம் ஏற்படுவதையும் அவதானிப்பார்கள். இதைத்தான் மருத்துவமொழியில் பிராடிகினீசியா என குறிப்பிடுகிறார்கள்.

பார்கின்சன் நோய் உங்களுடைய இயக்கத்தின் வேகத்தை குறைத்து விடும். இதனால் பசியாறிய உடன் எளிதாக சாப்பாட்டு மேஜையில் இருந்து எழுந்து சென்று கை கழுவும் பணியில் தாமதம் ஏற்படும். சிலருக்கு இந்த முழு செயலும் கடினமானதாகவோ அல்லது இயல்பு தன்மையிலிருந்து மாற்றம் கொண்டதாகவோ இருக்கும் . வேறு சிலருக்கு நீராடும் போதோ அல்லது ஆடை அணிவதோ இயல்பானதை விட அசௌகரியம் அதிகம் உள்ளதாக மாறக்கூடும். சிலருக்கு கண்களை இமைப்பது கூட கடினமானதாக இருக்கும். முகத்தில் வாய் அசைவு - பேச்சு- பல் துலக்குதல் - போன்ற செயல்பாடுகளிலும் ஒரு எதிர்பாராத இயல்புக்கு மீறிய நிலை ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.‌

இதை தவிர்த்து தசைகள், உடலியல் அமைப்பில் உள்ள தானியங்கி அசைவுகள் ,பேச்சு, எழுதுவது, உறக்கம்... என பல நாளாந்த செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டு, நினைவாற்றலில் சிக்கல்கள் எழக்கூடும்.  இத்தகைய தருணங்களில் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று நரம்பியல் நிபுணர்களை சந்தித்தால் அவர்கள் இது தொடர்பான பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அந்த பரிசோதனையின் அடிப்படையில் உங்களுக்கு டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் எனும் மின்னாற்றல் மூலமாக நவீன தூண்டுதல் சிகிச்சையை மேற்கொண்டு நரம்பு மண்டல இயக்கத்தின் செயல்பாடுகளை சீராக மாற்றி அமைப்பர்.

வைத்தியர் விகாஷ் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒவ்வாமை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-09-15 14:44:25
news-image

மைக்சுரிஷன் சின்கோப் எனும் திடீரென்று ஏற்படும்...

2026-09-14 15:28:54
news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39