(நெவில் அன்தனி)
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வரலாற்று முக்கியம்வாய்ந்த நிகழ்வாக கிரிக்கெட் போட்டி மீண்டும் திரும்பவுள்ள நிலையில் நீண்ட கால வைரிகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகக் காணப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டம் துபாயில் கடந்த வாரம் நடைபெற்றபோது லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான கிரிக்கெட் தகுதிகாண் முறைமையை கிரிக்கெட்டை நிருவகிக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணிகளுக்கான தரவரிசைக்கு அமைய ஒவ்வொரு பிராந்தியத்திலும் முதலிடத்தை வகிக்கும் அணிகளுக்கே ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருப்பதால் எந்த கால எல்லைக்கான ரி20 கிரிக்கெட் தரவரிசை கருத்தில் கொள்ளப்படும் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
ஒலிம்பிக் விளையாட்டு விழா கிரிக்கெட்டில் ஆண், பெண் இருபாலாருக்கும் மொத்தம் 28 போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்தது.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டுக்கான தற்போதைய தரவரிசையின் பிரகாரம் அந்தந்த பிராந்தியத்தில் முதல் இடத்தில் உள்ள நான்கு அணிகளும் வரவேற்பு நாடான ஐக்கிய அமெரிக்காவும் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட தகுதிபெறும்.
ஐசிசி ஆடவர் அணிகளுக்கான ரி20 தரவரிசையில் இப்போதைக்கு இந்தியா (ஆசிய பிராந்தியம்), அவுஸ்திரேலியா (கடல்சூழ் நாடுகள் பிராந்தியம்), இங்கிலாந்து (ஐரோப்பிய பிராந்தியம்), தென் ஆபிரி;க்கா (ஆபிரிக்க பிராந்தியம்) ஆகியன முன்னிலையில் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா (அமெரிக்காக்கள் பிராந்தியம்) வரவேற்பு நாடகாக நேரடியாக பங்குபற்ற தகுதிபெறும்.
ஆறாவது இடத்திற்கு உலகளாவிய தகுதிகாண் சுற்றின்மூலம் ஒரு அணி தெரிவுசெய்யப்பட்டும்.
ஆடவருக்கான உலகளாவிய தகுதிகாண் சுற்றில் நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் (ஐக்கிய அணியாக இருந்தால்) ஆகிய ஐந்து அணிகள் மோதும். அதில் வெற்றிபெறும் அணி ஆறாவது அணியாக ஒலிம்பிக்கில் பங்குபற்ற தகுதிபெறும்.
மகளிர் அணிகளுக்கும் இதே முறைமை பின்பற்றப்படும்.
மகளிருக்கான உலகளாவிய தகுதிகாண் சுற்றில் நியூஸிலாநது, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து, ஆகிய ஐந்து அணிகள் பங்குபற்றும். அதில் வெற்றிபெறும் அணி ஆறாவது நாடாக ஒலிம்பிக்கில் பங்குபற்ற தகுதி பெறும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM