இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்' கொழும்பில்!

10 Nov, 2025 | 05:27 PM
image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்' நிகழ்வு கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்' நிகழ்வு ஒரு வாரம் நடைபெறும். 

சமஸ்கிருதத்தின் பாரம்பரியமாகவும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பகிரப்பட்ட நாகரிக மரபாகவும் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்நிகழ்வின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு சமஸ்கிருத மஹோத்ஸவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு  இலங்கையின் கல்வி அமைச்சுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். 

அத்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசாரப் பாலமாக சமஸ்கிருத மஹோத்ஸவத்தின் முக்கிய பங்கை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எடுத்துரைத்தார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறிஞர்கள், மதகுருமார், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட புதிய அலை கலை...

2025-12-05 17:47:15
news-image

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற தமிழ்ப் பெண்மணியாக...

2025-12-05 17:02:13
news-image

கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட...

2025-12-04 17:45:01
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய...

2025-12-03 12:21:20
news-image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள்...

2025-11-30 18:55:02
news-image

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...

2025-11-27 16:40:30
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...

2025-11-26 18:26:24
news-image

மானிப்பாய் வைத்தியசாலை மேம்பாட்டை முன்னிட்டு சைக்கிள்...

2025-11-26 12:58:56
news-image

சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின்...

2025-11-24 18:43:34
news-image

அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-11-24 17:32:43
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய...

2025-11-23 16:14:33