பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்!

10 Nov, 2025 | 05:23 PM
image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் திருகோணமலை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை பனை அபிவிருத்தி சபைக் கிளையின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. 

இதில் பிரதம அதிதியாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், விசேட அதிதியாக வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன்  பனைசார்ந்த கைத்தொழில்களை விருத்தி செய்யும் முகமாக பயனாளிகளுக்கு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து அதற்கு தேவையான ஆலோசனைகளை பனை அபிவிருத்தி சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள்   அமைச்சின் எனது ஒருங்கிணைப்புச் செயலாளர் சிவனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட புதிய அலை கலை...

2025-12-05 17:47:15
news-image

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற தமிழ்ப் பெண்மணியாக...

2025-12-05 17:02:13
news-image

கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட...

2025-12-04 17:45:01
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய...

2025-12-03 12:21:20
news-image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள்...

2025-11-30 18:55:02
news-image

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...

2025-11-27 16:40:30
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...

2025-11-26 18:26:24
news-image

மானிப்பாய் வைத்தியசாலை மேம்பாட்டை முன்னிட்டு சைக்கிள்...

2025-11-26 12:58:56
news-image

சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின்...

2025-11-24 18:43:34
news-image

அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-11-24 17:32:43
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய...

2025-11-23 16:14:33