(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2025 வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 46 பில்லியன் ரூபா செலவிடப்படாமல் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியைச் சேமித்து, சர்வதேச நாணய நிதியத்திற்கு முதன்மை உபரியை 2.3 வீதமாகக் காண்பிப்பதன் மூலம் எந்த விளைவையும் அடைய முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அடுத்த வருடத்துக்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வரவு - செலவுத் திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. வரவு - செலவுத் திட்ட ஆவணத்தின் ஒரு பகுதி வெளி உலகிற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் எதிர்பார்ப்புகள் இந்த வரவு - செலவுத் திட்ட உரையில் உள்ளடங்கியுள்ளன. முதன்மை உபரி 2.3 என்ற கூற்று இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ளதா என கேட்கிறோம். முதன்மை உபரி அதிகரிப்பை மகிழ்ச்சிக்கான காரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா?
நாடு, அதன் அபிவிருத்தித் தேவையான நிதியைச் செலவிடாமல் வைத்திருந்தால், முதன்மை உபரி பற்றிய கூற்று யதார்த்தமானதாக அமையாது. 2025 வரவு - செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ள திட்டங்களை நாம் பரிசீலிக்கும்போது மட்டுமே இதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
2025 வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 46 பில்லியன் ரூபா செலவிடப்படாமல் காணப்படுகின்றது. இதுபோன்ற பல திட்டங்களை உதாரணங்களாக குறிப்பிடலாம்.
2025ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டத்தில் கிராமிய உட்கட்டமைப்பிற்காக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும், 272 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 93 வீத ஒதுக்கீடுகள் திறைசேரிக்கு மீள அனுப்பப்பட்டுள்ளன. உற்பத்திப் பொருளாதாரம் குறித்து பேசும் அரசாங்கம், கெரவலப்பிட்டிய சுங்க முனையத்தை நிர்மாணிக்க 2025 வரவு - செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கியது. வேயங்கொடை கொள்கலன் முனையத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தது. இதன் முன்னேற்றம் 0 வீதமாகும்.
அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து பேசுகிறது. அது நாட்டின் எதிர்காலம் என்று கூறுகிறது. அரசாங்கம் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து பேசுகிறது. டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்க முதல் கட்டமாக, கடந்த ஆண்டு 183 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதன் முன்னேற்றம் என்ன? 0.1 வீதமாகும். 99.9 வீதம் செலவிடப்படவில்லை.
கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. செலவு 0 வீதமாகும். இளம் தொழில்முனைவோரை உருவாக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதன் முன்னேற்றம் 0 வீதமாகும்.. நன்னீர் மீன்பிடித் துறைக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதன் முன்னேற்றம் 0வீதமாகும். இவ்வாறு நிதியைச் சேமித்து, சர்வதேச நாணய நிதியத்திற்கு முதன்மை உபரியை 2.3 வீதமாகக் காண்பிப்பதன் மூலம் எந்த விளைவையும் அடைய முடியாது என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM