இளைஞன் ஒருவரை கொலை செய்துவிட்டு சந்தேக நபர் என கருதப்படும் மற்றுமொரு இளைஞர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள 25 வயதுடைய இளைஞர் வீதியின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு மற்றுமொரு நபர் சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபரே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரு இளைஞர்களும் மித்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.