பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் உறுதியாக அமுல்படுத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருண

10 Nov, 2025 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பு  குறித்து  வழங்கிய வாக்குறுதிகள் வெறும் வரவு - செலவுத் திட்ட  உரையாகவே காணப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் உறுதியாக அமுல்படுத்த வேண்டும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (10) நடைபெற்ற  2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் நாட்டை  பொறுப்பேற்றோம் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.  

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்  தேர்தல் நடைபெறும்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டிருந்தது. 

அதனால் தான் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற்றது ஆகவே பொருளாதார நெருக்கடியுடன்  நாட்டைப் பொறுப்பேற்றோம் என்று இனியும் குறிப்பிடாதீர்கள்.

2025ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 20  சதவீதமானவை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன.மிகுதி 80 சதவீதமானவை காணாமலாக்கப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும்  பல விடயங்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. வரவு -செலவுத் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை.

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு பற்றி வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும்   வரவு- செலவுத்  திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு பற்றி  குறிப்பிடப்பட்டன.

இருப்பினும் ஏதும் செயற்படுத்தப்படவில்லை. ஆகவே இம்முறை வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்புக் கோர வேண்டிய அவசியம் கிடையாது. 

அரசாங்கத்திடம் பெரும்பான்மை உள்ளது. சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிடலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36