update : தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி ; 50 பேர் காயம்!

10 Nov, 2025 | 06:56 PM
image

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

17 வயதுடைய உயர்தர மாணவனே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 12.30 மணியளவில் தலாவ பகுதியில் இருந்து ஜயகங்கை ஊடாக நொச்சியாகம நவஹங்குரன்கெத்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ், பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு முந்திச் செல்வதற்காக இடம் கொடுப்பதற்கு முயற்சித்தபோது கால்வாயிலில் விழுந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்பது மேலும் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 16 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் திலகரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விபத்து தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை...

2025-12-15 11:05:45
news-image

இந்திய இராணுவ மருத்துவக் குழு நாடு...

2025-12-15 11:30:30
news-image

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2025-12-15 10:42:22
news-image

யாழின் மூத்த விவசாயிக்கு ஏராள் வேந்தன்...

2025-12-15 11:32:28
news-image

மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி...

2025-12-15 10:30:40
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

21 கிலோ 'குஷ்' கஞ்சாவுடன் போதைப்பொருள்...

2025-12-15 11:10:51
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07