அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு!

10 Nov, 2025 | 03:16 PM
image

சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் "அரசியல் தீர்வும்  பொறுப்புக்கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு" மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (9) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூத்த சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் சிறப்புரை ஆற்றியிருந்தார். தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக் கோட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கலந்துரையாடலை சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் நெறியாள்கை செய்திருந்தார்.

இந்நிகழ்வில் சுவிற்ஸர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24