அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரரும், அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளருமான பிரெட் ஹெடின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கிரெக் பிளெவெட்  தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவரின் இடத்துக்கு ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரெட் ஹாடின் எதிர்வரும் 2019 ம் ஆண்டு நிறைவுவரை அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.