'முழு நாடுமே ஒன்றாக': போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

Published By: Digital Desk 1

10 Nov, 2025 | 01:27 PM
image

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 7 கிலோ கிராம் 21 கிராம் ஹெரோயின், 4 கிலோகிராம் 715 கிராம் ஐஸ், 1 கிலோகிராம் 968 கிராம் கஞ்சா, 32,111 கஞ்சா செடிகள், 425 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 14,711 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 886 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 1,284 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 15 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி...

2026-08-11 12:55:08
news-image

இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு...

2026-08-12 06:09:34
news-image

இன்றைய வானிலை 

2026-08-12 05:58:11
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்:...

2026-08-12 05:53:03
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பொறிக்குள்...

2026-08-12 05:48:40
news-image

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத்...

2026-08-12 05:45:38
news-image

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: இறுதி...

2026-08-12 05:41:45
news-image

சவூதி அரேபியாவில் தொழில் எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காகநடத்தப்படும்...

2026-08-12 05:19:24
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40