மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

10 Nov, 2025 | 12:44 PM
image

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 1211 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா கடந்த 08 ஆம் திகதி இரவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் ஓலைதொடுவாய் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்ட போதே மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் கல்பிட்டியின் தொரடி மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2025-12-15 10:42:22
news-image

மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி...

2025-12-15 10:30:40
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

21 கிலோ 'குஷ்' கஞ்சாவுடன் போதைப்பொருள்...

2025-12-15 11:10:51
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13