( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பிணைமுறி மோசடி பற்றி அடிக்குறிப்பு எழுதியவர்கள் ஊழல் மோசடி பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணமளிப்போம். 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பற்றி எதிர்க்கட்சியினர் மாத்திரமே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் வரவு - செலவுத் திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். நடுத்தர மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெறுப்பை முன்னிலைப்படுத்தி பேசுகிறார்கள். ஊழல் மோசடி பற்றி பிணைமுறி மோசடி பற்றி அடிக்குறிப்பு எழுதியவர்கள் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்திகளை அதிகரித்து மக்களுக்கு நிவாரமளிப்போம். பொருளாதார மீட்சிக்குரிய எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. 2028 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசமுறை கடன்களை செலுத்துவது நெருக்கடிக்குள்ளாக்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.
பொருளாதார மீட்சி, வெளிநாட்டு கடன்களை செலுத்தல் பற்றி எதிர்க்கட்சிகள் அச்சமடைய வேண்டியதில்லை. பொருளாதார முகாமைத்துவத்துவதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்கள் செலுத்தப்படும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM