ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங் சைனா சம்பியன்

10 Nov, 2025 | 12:38 PM
image

(நெவில் அன்தனி)

கோப்பைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய ஹொங்கொங் சைனா கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டி சம்பியனானது.

அப் போட்டியில் பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

ஜிஷான் அலாம் 51 ஓட்டங்களையும் அபு ஹைதர் 28 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நஸ்ருல்லா ரானா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் சைனா 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அய்ஸாஸ் கான் 15 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது போட்டி விதிகள் பிரகாரம்  4ஆவது ஓவரில் ஓய்வுபெற்றார். (73 - 2 விக்.)

ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அபு ஹதர் ஒரு ஓட்டத்துடன் சுயமாக ஆட்டம் இழப்பதாக அறிவித்தார். அப்போது ஹொங்கொங் சைனாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த அய்ஸாஸ் கானுக்கு போட்டி விதிகள் பிரகாரம் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர், 5 சிக்ஸ்களை விளாசி ஹொங்கொங் அணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். அந்த ஓவரில் 2 வைட்கள் பதிவாகியதுடன் ஒரு பந்து டொட் போல் ஆனது.

அய்ஸாஸ் கான் 21 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 11 சிக்ஸ்கள் உட்பட 85 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நிஸாகத் கான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அபு ஹைதர் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அய்ஸாஸ் கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வுபெற்றார் WWE ஜாம்பவான் ஜோன்சினா!

2025-12-14 13:48:40
news-image

மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரகளை...

2025-12-13 16:30:55
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின்...

2025-12-13 15:19:36
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய...

2025-12-12 19:13:18
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2025-12-12 18:02:03
news-image

19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை...

2025-12-12 15:12:17
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட்...

2025-12-12 14:05:24
news-image

குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்...

2025-12-12 12:42:07
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) புதிய...

2025-12-11 18:39:16
news-image

19 வயதுக்குட்பட்டோர் இலங்கை கிரிக்கெட் அணி...

2025-12-10 12:47:26
news-image

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ரி20 இல்...

2025-12-09 23:12:13
news-image

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச்...

2025-12-09 18:18:08