(நெவில் அன்தனி)
ஹொங்கொங், மொங் கொக் மிஷன் ரோட் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பிரதான கிண்ணப் பிரிவில் சம்பியனானது.
கிரிக்கெட் விளையாடும் பிரபல நாடுகளான அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை உட்பட 12 நாடுகள் ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றின.
பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் கிண்ணம், கோப்பை, குவளை ஆகிய பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகளில் பங்குபற்ற தகதிபெற்றன.
பிரதான கிண்ணப் பிரிவில் முற்றிலும் எதிர்பாராத விதமாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற குவைத்தை பாகிஸ்தான் 43 ஓட்டங்களால் வெற்றிகொண்டு சம்பியனானது.
பாகிஸ்தான் 6 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் அபாஸ் அப்றிடி 11 பந்துகளில் 7 சிக்ஸ்கள் உட்பட 52 ஓட்டங்களைப் பெற்று போட்டி விதிகளுக்கு அமைய ஓய்வு பெற்றார்.
போட்டி விதிகள் பிரகாரம் வீரர் ஒருவர் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததும் ஓய்வு பெற்றாக வேண்டும். இதற்கு அமைய அவர் ஓய்வு பெற்றார்.
அப்துல் சமாத் 42 ஓட்டங்களையும் கவாஜா நபாய் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவைத் 5.1 ஓவர்களில் 6 விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.
குவைத் 9 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.
ஆரம்ப வீரர்களான மீட் பாவ்சர் 33 ஓட்டங்களையும் அத்னான் இத்ரீஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மாஸ் சதாகத் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: அபாஸ் அப்றிடி











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM