பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர் பலி ; 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு!

10 Nov, 2025 | 11:41 AM
image

பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பங்-வோங் சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கி.மீ  முதல்  230 கி.மீ வரை வீசியதால் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும்  ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயலுக்குப் பிறகு, தற்போது பங்-வோங் சூறாவளி தாக்கி வருகிறது. 

கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் அதிகளவானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளை தாக்கிய பங்-வோங் சூறாவளி ஞாயிற்றுக்கிழமை (9) இரவு லூசோன் தீவின் அரோரா மாகாணத்தின் கரையைக் கடந்தது. 

இதன் காரணமாக லூசோன் தீவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூடானில் ட்ரோன் தாக்குதல்: ஐ.நா. அமைதிப்படை...

2025-12-15 10:33:19
news-image

அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 16...

2025-12-15 09:06:09
news-image

தேர்தலில் கட்சி தோல்வி: மீசையை இழந்த...

2025-12-14 23:05:12
news-image

அவுஸ்திரேலிய தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு ...

2025-12-14 20:12:43
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2025-12-14 17:18:20
news-image

நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி,...

2025-12-14 12:52:11
news-image

காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் :...

2025-12-14 11:30:18
news-image

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர்...

2025-12-14 07:33:32
news-image

மெஸ்ஸியின் இந்திய வருகை ; கொல்கத்தா...

2025-12-13 15:44:46
news-image

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த...

2025-12-13 12:15:57
news-image

தாய்லாந்து – கம்போடியா தாக்குதல் தொடரும்...

2025-12-13 12:03:09
news-image

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு...

2025-12-13 10:23:23