தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் ரோஹிங்கியாக்களின் படகு விபத்து : 7 பேர் உயிரிழப்பு, பலர் மாயம் !

10 Nov, 2025 | 10:05 AM
image

மியான்மாரின் புதிடாங் நகரிலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (9) மீட்புக் குழுவினர் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட ஏழு பேரின் உடல்களை மீட்டதோடு, இதுவரை 13 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமைப்பின் (MMEA) பிராந்தியத் தலைவர் ரோம்லி முஸ்தபா தெரிவித்தார்.

படகு தாய்லாந்தின் கோ தாருடாவ் தீவுக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த படகில் சுமார் நூற்றுக்காணக்கானவர்கள் இருந்ததாகவும், இது மியான்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட 300 ரோஹிங்கியாக்களின் பெரிய குழுவில் ஒன்றாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகு கரைக்கு அருகில் வந்தபோது, அவர்கள் மூன்று சிறிய படகுகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டனர். ஒவ்வொரு படகிலும் சுமார் 100 பேர் ஏற்றப்பட்டிருந்தனர் என கடா மாநில பொலிஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

ஏனைய இரண்டு படகுகள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவிவ்வை. அந்தப் படகுகள் குறித்து லங்காவி தீவைச் சுற்றிய 583 சதுர கிலோமீற்றர் பரப்பில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 16...

2025-12-15 09:06:09
news-image

தேர்தலில் கட்சி தோல்வி: மீசையை இழந்த...

2025-12-14 23:05:12
news-image

அவுஸ்திரேலிய தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு ...

2025-12-14 20:12:43
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2025-12-14 17:18:20
news-image

நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி,...

2025-12-14 12:52:11
news-image

காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் :...

2025-12-14 11:30:18
news-image

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர்...

2025-12-14 07:33:32
news-image

மெஸ்ஸியின் இந்திய வருகை ; கொல்கத்தா...

2025-12-13 15:44:46
news-image

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த...

2025-12-13 12:15:57
news-image

தாய்லாந்து – கம்போடியா தாக்குதல் தொடரும்...

2025-12-13 12:03:09
news-image

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு...

2025-12-13 10:23:23
news-image

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத...

2025-12-13 11:23:41