மட்டக்களப்பில் கைது செய்த ஜஸ் போதைப்பொருள் வியாபாரியான மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைப்பு

Published By: Vishnu

10 Nov, 2025 | 03:54 AM
image

மட்டக்களப்பு நகரில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் பிள்ளையானின் மொழி பெயர்பாளர் கணவனை 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (8) அனுமதியளித்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது;

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது  அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் மொழி பெயர்பாளர், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின்  கணவரை 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் சனிக்கிழமை (8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட வியாபாரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதித்தார்.

அதனை தொடர்ந்து 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு தொழிலாளி பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29