வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்திக்காக ரூ.300 மில்லியன் ஒதுக்கீடு – பிரதீப் சுந்தரலிங்கம்

Published By: Vishnu

10 Nov, 2025 | 03:47 AM
image

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், ஞாயிற்றுக்கிழமை (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பனை சார் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பிரதி அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் 'கற்பகம்' என்ற பெயரில் பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் பெறுமதி வாய்ந்த பனை உற்பத்தி பொருட்களுக்கான உபகரணங்களும் பிரதி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த  நிகழ்வில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், பிரதி அமைச்சர்களின் செயலாளர்கள், பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09