ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும் - ஆளும் தரப்பு எம்.பி கலைச்செல்வி கோரிக்கை

09 Nov, 2025 | 02:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார். தற்போது 400 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜீவன் தொண்டமான் இதற்கு என்ன சொல்லப்போகிறார். பதிலளிக்க முடியாவிடின் அவர் பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அனைவரும் பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என  தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உலக சாதனை படைத்தது. பிரதான சாதனையாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுள்ளார்.அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் வீட்டு  உரிமை காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 1992 -2021 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையே பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் உட்கட்டமைப்பு துறை அபிவிருத்திகளுக்காக கடந்த காலங்களில் வரவு - செலவுத் திட்டத்தின் போது நான் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் திகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை ஜனாதிபதி 400 ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஜீவன் தொண்டமான் தற்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார்.

பதிலளிக்க முடியாவிடின் அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அனைவரும் பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35