எதிர்க்கட்சிகளை இலக்காக கொண்டு ஆட்சிக்கு வரவில்லை சட்டம் பாரபட்சமின்றி செயற்படுத்தப்படுகிறது - பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

09 Nov, 2025 | 12:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சட்டம் அனைவருக்கும் பொதுவான வகையில் பாரபட்சமின்றி செயற்படும் போது அதனை ஜனநாயகத்துக்கு விரோதமான  செயற்பாடு  என்று எவ்வாறு குறிப்பிடுவது. எதிர்க்கட்சிகளை இலக்காகக் கொண்டு நாங்கள்  ஆட்சிக்கு வரவில்லை. மக்களை இலக்காகக்  கொண்டே ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோமென  பிரதமர் ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம்  ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுவதாகவும், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல கல்வி முறைமையை பலவீனமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஜனநாயகம் எங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவான வகையில் பாரபட்சமின்றி செயற்படும் போது  அதனை ஜனநாயகத்துக்கு விரோத செயற்பாடு  என்று எவ்வாறு குறிப்பிடுவது.

பல கட்சி முறைமையை இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. எதிர்கட்சிகளின் செயற்பாடுகளினால் தான் பல கல்வி முறைமை பலவீனமடையும். எதிர்க்கட்சிகளை இலக்காகக் கொண்டு நாங்கள்  ஆட்சிக்கு வரவில்லை. மக்களை இலக்காகக்  கொண்டே ஆட்சிக்கு வந்துள்ளோம்.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து இன மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.நாட்டின் நிதி நிலைமையை   கருத்திற் கொண்டு  அனைத்து தரப்பினருக்கும் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் கல்வித்துறை மறுசீரமைப்புக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மக்களுக்கு குறிப்பிடவில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12
news-image

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி...

2026-07-14 10:21:51
news-image

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய...

2026-07-14 10:00:06
news-image

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன்...

2026-07-14 10:47:49
news-image

போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!

2026-07-14 09:47:43