அத்திட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்னர்.

அத்திட்டிய பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தையடுத்து அதை தடுக்க முயன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்களின் துப்பாக்கிப்பிரயோகத்தில் சிக்கி ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட நிலையில் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அத்திட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.