தெற்கு பிரேசிலில் சூறாவளி ;  06 பேர் பலி : நூற்றுக்கணக்கானோர் காயம்

Published By: Digital Desk 3

09 Nov, 2025 | 11:32 AM
image

தெற்கு பிரேசிலிய மாநிலமான பரானாவில் பலத்த காற்று மற்றும் கடும் மழையுடன் கூடிய சூறாவளி தாக்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ரியோ போனிடோ டோ இகுவாசு நகரம் வெள்ளிக்கிழமை சூறாவளியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறப் பகுதியில் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகளில் கூரை இடிந்து விழுந்ததாகவும், பல கட்டமைப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் மாநில சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

437 பேர் காயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும், சுமார் 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அருகிலுள்ள குவாரபுவா நகரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியினால் காற்று மணிக்கு 180 கிலோ மீற்றர் (111 மைல்) முதல் 250 கிலோ மீற்றர் (155 மைல்) வேகத்துக்கு வீசியுள்ளதாக பரானா வானிலை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல். பரானா மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூடானில் ட்ரோன் தாக்குதல்: ஐ.நா. அமைதிப்படை...

2025-12-15 10:33:19
news-image

அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 16...

2025-12-15 09:06:09
news-image

தேர்தலில் கட்சி தோல்வி: மீசையை இழந்த...

2025-12-14 23:05:12
news-image

அவுஸ்திரேலிய தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு ...

2025-12-14 20:12:43
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2025-12-14 17:18:20
news-image

நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி,...

2025-12-14 12:52:11
news-image

காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் :...

2025-12-14 11:30:18
news-image

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர்...

2025-12-14 07:33:32
news-image

மெஸ்ஸியின் இந்திய வருகை ; கொல்கத்தா...

2025-12-13 15:44:46
news-image

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த...

2025-12-13 12:15:57
news-image

தாய்லாந்து – கம்போடியா தாக்குதல் தொடரும்...

2025-12-13 12:03:09
news-image

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு...

2025-12-13 10:23:23