நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் பலி!

Published By: Digital Desk 1

09 Nov, 2025 | 12:51 PM
image

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் எட்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவங்கள் மாத்தளை, தனமல்வில, வெலிகந்த மற்றும் கொட்டவில ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளன.

வெலிகந்த அசேலபுர பகுதியில் அசேலபுர குருலுபெத்த வீதியில் உழவு இயந்திரம் எட்டு வயது சிறுவன் மீது மோதியது. இதன்போது,  அசேலபுரத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் பலத்த காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை,  கண்டி-யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலையில் தியாபுபுல பாலத்திற்கு அருகில், மாத்தளையிலிருந்து எல்வெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி பாதசாரி ஒருவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த 70 வயதுடைய முதியவர் மாத்தளை வைத்டதியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தனமல்வில-வெல்லவாய வீதியில் பலஹருவ பகுதியில் எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, பலத்த காயமடைந்து சிகிச்சை 45 வயதான வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.

கொட்டவிலவில் கம்புருகமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்துடன் நேரு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கம்புருகமுவவைச் சேர்ந்த 82 வயதான சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-11 06:27:58
news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26