அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

Published By: P. Saranya

09 Nov, 2025 | 10:28 AM
image

அமெரிக்காவில் சனிக்கிழமை (08) ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அத்தியாவசிய துறையில் பணிபுரியும் 7 இலட்சம் பேர் ஒரு மாதமாக சம்பளம் இன்றி வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் 6.5 இலட்சம் பேர் கட்டாய விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தைக் குறைத்ததால்,  1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிகாகோ, ஹூஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதனால், இலட்சக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர்.

சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 பாதுகாப்புச் சோதனை ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

இதே பணிநிறுத்தம் தொடர்ந்தால், விமானப் போக்குவரத்தானது வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் 6 சதவிகிதமும் நவ. 10 ஆம் திகதிக்குள் 10 சதவிகிதமும் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07
news-image

பிரான்ஸில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து...

2026-09-12 09:32:10
news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24
news-image

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை...

2026-09-11 14:39:40
news-image

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன்...

2026-09-11 14:13:15
news-image

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார்...

2026-09-11 13:29:38
news-image

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை: சிட்னி...

2026-09-11 16:57:18