பாலிட்ராமா எனும் பாதிப்பிற்குரிய நவீன ஒருங்கிணைப்பு சிகிச்சை

08 Nov, 2025 | 06:11 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் எதிர்பாராத வகையிலான சிறிய விபத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக மாடி படியிலிருந்து இறங்கி வரும் போதோ அல்லது ஏறும்போதோ கால் இடறி விழுந்து விடுவார்கள்.  இத்தகைய தருணங்களில் பாதிப்பிற்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையும் , வைத்திய சிகிச்சையும் பெற்றுக் கொள்கிறார்கள். அதே தருணத்தில் வாகனத்தில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால்.. உடலில் பல இடங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய நிலையை மருத்துவ மொழியில் பாலிட்ராமா எனக் குறிப்பிட்டு, நோயாளியை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ஒருங்கிணைந்த நிவாரண சிகிச்சையை வழங்குகிறார்கள்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியின் உடலில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை முதலில் பரிசோதனைகள் மூலம் துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து முதலுதவி மற்றும் உயிர் காக்கும் சிகிச்சையை முதன்மையான நிவாரண சிகிச்சையாக மேற்கொள்வார்கள். பின்னர் உடலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள்- எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் - நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள்- சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் - உளவியல் சிகிச்சை நிபுணர்கள் - இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் - ஆகியோர் ஒருங்கிணைந்து நோயாளிகளுக்கு நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள்.‌

அதன் பிறகு நோயாளியை மெல்ல மெல்ல விபத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீட்டு, அவர்களை சிகிச்சைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதனைத் தொடர்ந்து பக்க விளைவுகள் குறித்தான ஆலோசனைகளையும் வழங்கி நிவாரண சிகிச்சையை மேற்கொள்ள தொடங்குவார்கள். இதன் போது பலருக்கும் குறைந்தபட்சம் மூன்று மாத காலம் ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

வைத்தியர் முத்தையன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒவ்வாமை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-09-15 14:44:25
news-image

மைக்சுரிஷன் சின்கோப் எனும் திடீரென்று ஏற்படும்...

2026-09-14 15:28:54
news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39