சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும், விருதையும் வென்ற 'கிணறு' எனும் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஹரி குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிணறு' எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கௌதம் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கிராமத்து சிறார்களின் நாளாந்த வாழ்வியலில் இடம் பிடிக்கும் கிணறு தொடர்பான காட்சிகள் உணர்வுபூர்வமானதாக இருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM