சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும் 'ஒண்டி முனியும் நல்லபாடனும்'

08 Nov, 2025 | 05:43 PM
image

சிறிய வேடங்களில் நடித்த திரைப்பட தொழில்நுட்ப கலைஞரான பரோட்டா கணேசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒண்டி முனியும் நல்லபாடனும்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் ரா. சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒண்டி முனியும் நல்லபாடனும்' எனும் திரைப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், விஜயன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், விஜய் சேனாதிபதி, முருகன், வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜே. டி. விமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு தெய்வ வழிபாடு தொடர்பான அரசியலை பேசும் இந்த திரைப்படத்தை திருமலை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கருப்பசாமி தயாரித்திருக்கிறார்.

இம்மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் - தமிழக கிராமங்களில் ஆதிக்க மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையேயான சிறு தெய்வங்களை வழிபடுவதில் உள்ள அரசியலை முன்னிறுத்தும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பார்வையாளர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right