மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

08 Nov, 2025 | 05:34 PM
image

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம்- 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

இதை இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.‌ இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர் ,நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

ஆட்டோகிராப் படம் மீண்டும் வெளியாவது ஏன்? என்பது குறித்து நடிகர் - தயாரிப்பாளர் - இயக்குநர் சேரன் பேசுகையில்,'' எந்த தோல்வியாக இருந்தாலும் அதை கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.  இதில் காதல் ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே..' என்பதைத் தான் இந்த திரைப்படம் சொல்கிறது.

தோல்வி அனைவருக்கும் வரும். அதை எதிர்கொண்டு கடந்து சென்று வெற்றி பெறும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதை இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றலாம். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம். '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-13 15:13:47
news-image

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா'...

2025-12-13 15:09:32
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு...

2025-12-12 18:14:32
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும்'ஆர்யா 40' படத்...

2025-12-12 18:12:33
news-image

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக...

2025-12-12 18:10:46
news-image

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி...

2025-12-12 18:09:02
news-image

தி கேரம் குயின்' எனும் திரைப்படமாக...

2025-12-12 18:06:55
news-image

ஜனவரியில் வெளியாகும் புதுமுகங்கள் நடிக்கும் 'டியர்...

2025-12-12 18:04:49
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு...

2025-12-12 18:02:56
news-image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு...

2025-12-12 17:55:53