நட்சத்திர வாரிசாக இருந்தாலும் கடினமாக உழைத்து இன்று பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் அருண் விஜய் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' ரெட்டதல' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ட தல' எனும் திரைப்படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி , யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோடாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM