2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 32,815 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,830 ஆகும்.
அத்துடன், ரஷ்யாவிலிருற்து 4,421 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,674 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,340 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,325 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,214 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,165 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 23 ஆயிரத்து 502 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM