கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர் “புகுடு கண்ணா”வின் சகாவா?

08 Nov, 2025 | 02:18 PM
image

கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த குழுவொன்று, நபரொருவர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தி அதே காரில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “புகுடு கண்ணா” என்று அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் சகா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பழனி ரெமோஷன் தரப்புக்கும் கண்ணா தரப்புக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45