தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க ஒருவர் கஞ்சாவுடன் நேற்றிரவு தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து 15 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.