சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் பி.எம்.டி. பண்டார ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது என நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
ஆனால், குறித்த இருவரும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமானதல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14 ஆயிரம் கேரம் பலகைகளையும், 11 ஆயிரம் தாம் பலகைகளையும் இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாய் வரையான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விசாரணைகளின் பின்னர், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராகப் பிரதிவாதிகள் தமது சட்டத்தரணிகளினூடாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த மேன்முறையீடுகள் விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை தம்மைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி, அவர்கள் தமது சட்டத்தரணிகள் ஊடாகவே இந்தக் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM