விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

08 Nov, 2025 | 09:49 AM
image

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியின் குறுக்கே சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன், களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27
news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31