பி.சி. பெரேரா சம்பள ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்காமையால் சுமார் 85,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு 40,000 ரூபா ஓய்வூதியம் பெறும் வேளை, மற்றும் சிலர் சுமார் 120,000 ரூபா ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB), ஐக்கிய மக்கள் கூட்டணியும் எடுக்க முடியுமான உட்சபட்ச நடவடிக்கைகளை எடுத்து, நீதியை நிலைநாட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பினரால் வெள்ளிக்கிழமை (07) தியத்த பொல்துவ சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் தலைமை தாங்குவோம். இது தொடர்பான முன்மொழிவுகளை இந்த இம்முறை வரவுசெலவுத் திட்ட விவாதத்திலும், குழு நிலை விவாதத்தின் போதும் முன்வைப்பேன். தேவைப்பட்டால் இலவச சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM