ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை குழுநிலைப் போட்டிகளில் தோல்வி

Published By: Vishnu

08 Nov, 2025 | 04:05 AM
image

(நெவில் அன்தனி)

ஹொங்கொங், மொங் கொக் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த வருடத்திற்கான ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கை தனது இரண்டு குழுநிலைப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விகளை அடுத்து குவலைக்கான சுற்றில் இலங்கை விளையாடவுள்ளது.

டி குழுவில் இடம்பெற்ற இலங்கை ஆரம்ப நாளான இன்றைய தினம் தனது முதலாவது போட்டியில் வரவேற்பு நாடான ஹொங்கொங்கிடம் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

இலங்கை 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது.

தனுக்க தாபரே 26 ஓட்டங்களையும் நிமேஷ் விமுக்தி ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் தனஞ்சய லக்ஷான் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நர்சுல்லா ரானா 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது..

அணித் தலைவர் யசிம் முர்ட்டஸா 8 பந்துகளில் 26 ஓட்டங்களுடனும் அய்ஸாஸ் கான் 10 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆட்டநாயகன்: அய்ஸாஸ் கான்

பங்களாதேஷிடமும் இலங்கை தோல்வி

பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் அக்பர் அலி 9 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களையும் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 7 பந்துகளில் 21 ஓட்டங்களையும் விளாசினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 5.1 ஓவர்களில் 6 விக்கெட்களையும் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

தனஞ்சய லக்ஷான் 18 ஓட்டங்களையும் லஹிரு சமரக்கோன் 13 ஓட்டங்களையும் தனுக்க தாபரே 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொசாடெக் ஹொசெய்ன் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயனானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33
news-image

முதலாவது தலைவராக பொறுப்பேற்கிறார் குசல் மெண்டிஸ்...

2026-08-10 12:33:35
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:47:51
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில்...

2026-08-10 08:59:45
news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45