இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக தசுன் ஷானக்க நியமிப்பு, சர்வதேச ஒருநாள் குழாத்தில் பவன் ரத்நாயக்க

Published By: Vishnu

08 Nov, 2025 | 03:59 AM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றுக்கான இரண்டு இலங்கை கிரிக்கெட் குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டது.

அணித் தலைவர் சரித் அசலன்க உட்பட 11 வீரர்கள் இந்த இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இலங்கையின் ரி20 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க உப தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பானுக்க ராஜபக்ஷவுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தில் முதலில் பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில்   இலங்கை   விளையாடும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளும் ராவல்பிண்டியில் நவம்பர் 11, 13, 15ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், ஸிம்பாப்பே ஆகிய அணிகளுடன் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடும்.

இந்த இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை குழாம்களில் சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, ஏஷான் மாலிங்க ஆகிய 11 பேர் இடம்பெறுகின்றனர்.

அவர்களுடன் லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, ஜெவ்றி வெண்டர்சே, ப்ரமோத் மதுஷான் ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்திலும் குசல் பெரேரா, தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, துஷான் ஹேமன்த, நுவன் துஷார ஆகியோர் சர்வதேச ரி20 குழாத்திலும் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த டில்ஷான் மதுஷன்க முழங்காலில் ஏற்பட்ட உபாதையிலிருந்து மீளாததால் அவருக்குப் பதிலாக ஏஷான் மாலிங்க இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஏஷான் மாலிங்க சரவ்தேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும் சர்வதேச ரி20 போட்டிகளில் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோன்று சர்வதேச ரி20 கிரிக்கெட் குழாத்தில் ஏற்கனவே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த மதீஷ பத்திரண உபாதையிலிருந்து மீளாததால் அவருக்குப் பதிலாக  அசித்த  பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, இளம் வீரர் பவன் ரத்நாயக்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தை அடுத்து அவரை தெரிவாளர்கள் ஒருநாள் குழாத்தில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதராக கடந்த வருட இறுதியிலும் இந்த வருட முற்பகுதியிலும் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய பானுக்க ராஜபக்ஷ மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எஸ்எல்சி ரி20 லீக்கிலும் அவர் பெரிதாக பிரகாசிக்காதபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருந்ததால் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ரி20 தொடரானது வீரர்களின் பலத்தை பரீட்சிப்பதாக அமையவுள்ளது.

எவ்வாறாயினும் இந்த இரண்டு தொடர்களிலும் இலங்கை வீரர்கள் தங்களது அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டியிலும் லாகூரிலும் நடைபெறும்.

முதலிரண்டு ரி20 போட்டிகள் ராவல்பிண்டியில் நவம்பர் 17, 19ஆம் திகதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி உட்பட மற்றைய போட்டிகள் லாகூரில் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37