முட்டை வாங்கச்சென்றவர் கையடக்கத்தொலைபேசியை திருடிச்சென்ற சம்பவமொன்று கடையில் பொருத்தப்பட்டடிருந்த சீ.சீ.டி வி கமெராவில் பதிவாகியுள்ளது.

அட்டன் நகரின் இரண்டாம் ஒழுங்கை வீதியிலுள்ள கோழி முட்டை விற்பனை நிலையத்தில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முட்டை வாங்க வந்த குறித்த நபர் கடை உரிமையாளரின் கையடக்கத்தொலைபேசிiய திருடிச்சென்றுள்ளார்.

கடை உரிமையாளர் தனது கையடக்கத்தொலைபேசியை காணாத நிலையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமெராவின் பதிவை சோதனையிட்டபோதே கையடக்கத்தொலைபேசி திருடியமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.