இயக்குநர் லிங்குசாமியின் உறவினரும், அறிமுக நடிகருமான மதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கும்கி 2' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கும்கி 2' எனும் திரைப்படத்தில் மதி, ஸ்ரீ தா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ் , ஸ்ரீநாத், ஹரிஷ் பெராடி, இயக்குநர் திரு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
அடர்ந்த வனத்தில் வாழும் யானை ஒன்றிற்கும், இளைஞன் ஒருவருக்கும் இடையேயான உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தவல் காடா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பெண் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் டொக்டர் ஜெயந்தி லால் காடா வழங்குகிறார்.
எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் நித்திலன் சுவாமிநாதன் - மடோனா அஸ்வின்- சரண்- ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''இந்த படத்திற்கான பயணத்தை 2018 ஆம் ஆண்டில் தொடங்கினோம். கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்டபடி பணிகள் நடைபெறவில்லை.
ஆனாலும் தயாரிப்பாளரும், லிங்குசாமியும் பொறுமையுடன் காத்திருந்து எங்களுக்கு உதவினர். இந்தப் படத்திற்கு அனைவரும் தங்களுடைய கடினமான உழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கான ஆன்மாவை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு அனைவராலும் பேசப்படும் '' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM