சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல் பாடல் வெளியீடு

07 Nov, 2025 | 04:59 PM
image

முன்னணி நட்சத்திர நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் 'பராசக்தி ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அடி அலையே..'  எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநரான சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி உள்ள 'பராசக்தி' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் ரீதியான போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' என் நெஞ்சுக்குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் ஏகாதசி எழுத பின்னணி பாடகர் ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி தீ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

தமிழ் மண்ணின் பாரம்பரிய இசை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பதால் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49