நானுஓயாவில் லொறி - வேன் விபத்து ; பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர் காயம் ; லொறி சாரதி கைது

07 Nov, 2025 | 04:35 PM
image

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், லொறியில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியிலிருந்து டெஸ்போட் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனுடன் நானுஓயா பிரதான நகரில் இருந்து எதிர்த்திசையில் பயணித்த லொறி மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவரும் பெற்றோரில் ஒருவரும் என 3 பேர் காயமடைந்த நிலையில் நானுஓயா  ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

லொறி சாரதியின் கவனக்குறைவினால் இவ்விபத்து சம்பவித்திருக்கலாம் என தெரிவித்த நானுஓயா பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24
news-image

பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை...

2026-09-09 16:28:09
news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54